தொற்று நோய் அபாயம்: பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!
YourStory Team Tamil | December 09, 2015
ஹரி பாலாஜி, வி.ஆர். தேசிய ஆலோசகர், பேரிடர் மேலாண்மை கூறும் வழிமுறைகள்:
உடனடி நடவடிக்கைகள்
குளோரின் கலந்த தண்ணீரைப் பயன்படுத்தல்
வெள்ளத்தால் ஏற்படும் தண்ணீர் மூலம் பரவும் தொற்று நோய் அபாயத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துதல் மிகவும் அவசியம்.
பொதுவாக தண்ணீரை சுத்திகரிக்க நீர்ம வடிவிலான சோடியம் ஹைபோகுளோரைட், திட வடிவிலான கால்சியம் ஹைபோகுளோரைட் மற்றும் பிளீச்சிங் பவுடர் (எலுமிச்சை குளோரைட், கால்சியம் ஹைட்ராக்சைடு கலவை, கால்சியம் குளோரைட் மற்றும் கால்சியம் ஹைபோகுளோரைட்) போன்றவை பயன்படுகின்றன.
மலேரியா தடுப்பு
கொசு ஒழிப்பு: வெள்ளம் வந்ததும் தண்ணீரில் கொசுக்கள் பெருகி விடுவதில்லை. எனவே கொசு தடுப்புக்கு நமக்கு போதுமான அவகாசம் இருக்கும். கொசு மருந்து அடித்தல், ஐடிஎன்எஸ் விநியோகித்தல் போன்றவை நன்கு அறியப்பட்ட கொசு ஒழிப்பு நடவடிக்கைகள். இது போன்ற நடவடிக்கைகள் கொசுக்களால் பரவும் நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.
ஆரம்ப நிலையில் கண்டறிதல்: நோயாளிகளின் வாராந்திர கணக்கீடு அவசியம், சோதனைக் கூட அளவிலான நோய் கண்டறிதல் அவசியம் (ஒரே ஒரு சதவீதம்தான் மலேரியா இருப்பதாக கண்டறியப்பட்டாலும்) உடனடியாக மலேரியா பரவலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இலவச மருத்துவம்: பால்சிப்பாரம் மலேசியா பரவுகிறது எனக் கண்டறியும் பட்சத்தில் ஆர்ட்டிமிசினின் மருந்துகள் அடங்கிய சிகிச்சையைத் தொடங்குதல் அவசியம். உடனடியாக காய்ச்சலைக் கண்டறிதல் மற்றும் மருத்துவ சேவைகளின் மூலம் உட்கிடைப் பகுதிகளில் நோய் இறப்புகளைத் தவிர்க்கலாம்.
சுகாதாரக் கல்வி
நல்ல சுகாதார நடவடிக்கைகளை ஊக்குவித்தல். பாதுகாப்பான உணவைத் தயார் செய்வதை உறுதி செய்ய வேண்டும். கொதிக்கவைத்த அல்லது குளோரின் கலந்த குடிநீரைப் பயன்படுத்தல். மலேரியாவை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை செய்தல் அவசியம். காய்ச்சல் வந்த 24 மணி நேரத்திற்குள் சிகிச்சையை உறுதி செய்தல் வேண்டும்.
சடலங்களைக் கையாளுதல்
பெரிய அளவில் மரணம் சம்பவிக்கும் பட்சத்தில் நோய் பாதித்த உடலைக் கண்டறிய முடியாது போய்விடலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் கூட்டாக உடல்களைப் புதைத்தல் உசிதம் எனக் கருதப்படுகிறது.
இறந்தவர்களின் உடல்களை உடனடியாக புதைக்க அல்லது எரித்து விட வேண்டும் எனவும் இல்லையானால் நோய் பரவும் எனவும் நம்பப் படுகிறது. இது தவறானது. சமூகச் சடங்குகளைப் புறந்தள்ளி விட்டு, சத்தமில்லாமல் உடலை புதைத்தல் அல்லது எரித்தல் கூடாது.
இறந்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்கே உரித்தான இறுதிச் சடங்குகளைச் செய்வதற்குரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சடங்கு இருக்கும். அவர்களுக்குரிய சம்பிரதாயங்களை உரிய கவுரவத்துடன் செய்வதற்குரிய இடங்கள் ஒதுக்கித் தரப்பட வேண்டும்.
இடுகாடு அல்லது சுடுகாடுகள் போதாத நிலை ஏற்பட்டால், மாற்று இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
இறுதிச் சடங்குக்குத் தேவையான விறகு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் இறந்தவர்களின் உறவினர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சடலங்களைக் கையாளும் தொழிலாளர்கள்
குடிநீருக்கான நிலத்தடி நீர் ஆதார இடத்தில் இருந்து குறைந்த பட்சம் 30 மீட்டர் தொலைவில் மயானம் இருக்க வேண்டும். புதை குழியின் அடி மட்டம் நிலத்தடி நீர்மட்டத்திற்கு மேல் குறைந்த பட்சம் 1.5 மீட்டர் மேலே இருக்க வேண்டும். அது 0.7 மீட்டர் கரைதிறனில்லா பகுதியாகவும் (unsaturated zone) இருத்தல் அவசியம். மயான பூமியில் உள்ள தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது.
நீண்ட கால நடவடிக்கைகள்
சட்ட மற்றும் நிர்வாக விஷயங்கள்
பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலை திட்டங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உள்ளூர் முதல் தேசம் வழியாக சர்வதேச அளவிலான கண்காணிப்பை மேம்படுத்தல். குழாய் தண்ணீர் தர முறைமை மற்றும் கண்காணிப்பை ஊக்குவித்தல். உயர்தர சுகாதாரத்தை நடைமுறைப்படுத்தல் அவசியம்.
தொழில் நுட்ப விஷயங்கள்
தண்ணீர் சுத்திகரித்தல் மற்றும் துப்புரவை மேம்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்புத் திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தல் மிக அவசியம்.
மேலும் விவரங்களுக்கு: HariBalaji, தேசிய ஆலோசகர், பேரிடர் மேலாண்மை, 8939037925